Wednesday, September 8, 2010

உங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்

சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் - Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)


இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த கருவியை
பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .

கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 


ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.






if u want to computer more tips then his blog is very much useful for u here its link http://suryakannan.blogspot.com/

No comments:

Post a Comment