Wednesday, September 8, 2010
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்
பழநியிலிருந்து வாசகி ஒருவர், கம்ப்யூட்டர் மலரில் பல தொகுப்புகளுக்கு ஷார்ட் கட் கீகள் தொகுப்பு போடுவதாகவும், இந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளார். சில மாதங்களாக இதனை மறந்துவிட்டோம் என்பது உண்மைதான். இதோ அவருக்காகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்காகவும், சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும் தரப்படுகின்றன.
F1– உதவிக் குறிப்புகள் பெற
F3 சர்ச் பேனல் திறக்கவும் மூடவும்
F4 அட்ரஸ் பாரினைக் கீழ் இழுத்துப் பார்க்க
F5 அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இறக்கிப் பார்க்க
F6 அட்ரஸ் பார் நோக்கிச் செல்ல
F11 முழுத்திரை பெறவும் மாற்றவும்
Alt + (Left Arrow) ஹிஸ்டரி பட்டியலில் பின் நோக்கிச் செல்ல, பேக் ஸ்பேஸ் போல
Alt + (Right Arrow) ஹிஸ்டரி பட்டியலில் முன்னோக்கிச் செல்ல
Ctrl + A அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C தேர்ந்தெடுத்த அனைத்தையும் காப்பி செய்திட
Ctrl + E சர்ச் பேனல் பெற
Ctrl + F இணையப் பக்கத்தில் தேட
Ctrl + H ஹிஸ்டரி பேனலைத் திறக்க/மூட
Ctrl + I பேவரிட்ஸ் பேனலைத் திறக்க / மூட
Ctrl + L பைல் ஒன்றைத் திறக்க
Ctrl + P அப்போதைய பக்கத்தினைத் திறக்க
Ctrl + R பக்கத்தினை மீண்டும் திறந்து பார்க்க. இதுவும் எப்5 கீ போலத்தான்.
Esc இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கும் இணையப் பக்க இறக்கத்தினை நிறுத்த
Ctrl + D அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, பேவரிட்ஸ் பிரிவில் சேர்க்க ஒரு சொல்லில் இரண்டு கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தால், அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலைக் கிளிக் செய்தால், ஸ்குரோல் செய்வது எளிதாகும். கண்ட்ரோல் அழுத்தி, ஸ்குரோல் வீலை முன்பக்கமாகச் சுழற்றினால், இணையப் பக்கத்தில் உள்ள எழுத்தின் அளவு பெரிதாகும். கீழ் நோக்கிச் சுழற்றினால், எழுத்தின் அளவு சிறியதாக மாறும். இணையப் பக்கத்தில் ஒரு இடத்தில் கிளிக் செய்த பின்னர், ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு, பின்னர் இன்னொரு இடத்தில் கிளிக் செய்தால், இரு இடங்களுக்கு இடையே உள்ள, டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
Source: http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1667&ncat=4
Labels:
TIPS n TRICK
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment