உள்கட்டமைப்பு மற்றும் திறன் தொடர்புடைய நிறுவனங்களில் பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கடந்த 1971-72 முதல் தொடர்ந்து லாபத்தையே ஈட்டுவதோடு 1976-77 முதல் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னிக் களை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் பிரிவில் 600 டிரெய்னிக்களும், சூப்பர்வைசர் பிரிவில் 700 டிரெய்னிக்களும் பணிக்கு சேர்க்கப்பட உள்ளனர்.
என்னென்ன பிரிவுகள்? என்ன தகுதி?
இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் மெக்கானிகல்பிரிவில் 400 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 125 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 75 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாகபடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01.08.2010 அன்று இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 01/08/1983க்கு முன் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். சூப்பர்வைசர் டிரெய்னி பிரிவில் மெக்கானிகல் பிரிவில் 550 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 150 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 75 இடங் களும், சிவில் பிரிவில் 25 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய பிரிவில் முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பில் குறைந்த பட்சம் 65 சத மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். 150 அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வானது, தொடர்புடைய துறையில் விண்ணப்பிப்பவரின் திறனறியும் விதத்தில் இருக்கும். இத்துடன் ரீசனிங், குவான்டிவேடிவ் ஆப்டியூட், லாஜிக்கல் திங்கிங், இங்கிலீஷ் யூசேஜ், பொது அறிவுப் பகுதியிலான கேள்விகளும் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி ?
இந்தப் பதவிகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.09.2010
இணைய தள முகவரி : www.bel.com
No comments:
Post a Comment