Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்

திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.
1984 ஆம் ஆண்டு கவிதாலயா தயா‌ரித்த பூ விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகரானவர் முரளி. அவரது முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. தமிழ்‌த் திரையுலகில் ச‌ரித்திரம் படைத்த புதிய வசந்தம், இதயம் உள்ளிட்ட படங்கள் முரளிக்கு புகழை சம்பாதித்து தந்தன.
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். அலட்டலில்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த முரளி பிறந்தது பெங்களூரு என்றாலும் அவர் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். நதிநீர் பிரச்சனையில் தமிழக, கன்னட திரையுலகினர் போராட்டங்களில் ஈடுபட்டபோது தமிழ்‌த் திரையுலகம் சார்பில் போராட்டத்தில் முதன்மையாக கலந்து கொண்டவர் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளியும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 99 படங்களை முடித்த முரளி 100 வது படத்தில் நடிக்க சமீபத்தில்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில்தான் நேற்றிரவு அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவரது உயிர் பி‌ரிந்தது.
முரளியின் திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலகினரும், பொதுமக்களும் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் முரளியின் வளசரவாக்கம் வீட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். நாளை முரளியன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
EVERY SOUL HAS TASTE DEATH;
SOURCE: tamil.webdunia.com

No comments:

Post a Comment