இஸ்லாமிய குடும்பவியல் தொடர் இலங்கையில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்.
Rasmin M.I.Sc
இதற்கு முன்பு கடந்த காலங்களில் ஈமானின் கிளைகள் இஸ்லாம் கூடும் பொருளியல் இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம் இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் மரணத்தின் பின் அந்த 72 கூட்டத்தினர் யார்? போன்ற பல தொடர் உரைகளை இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்தில் நிகழ்த்தியதின் மூலம் இந்த நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களிடம் அபார வரவேற்பை பெற்றது.
பொதுவாகவே மவ்லவி ஜெய்னுலாப்தீன் அவர்களின் உரைகள் தமிழ் பேசும் மக்களிடம் அபார தாக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் ரமழான் மாதத்தில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவை மவ்லவி ஜெய்னுலாப்தீன் நிகழ்த்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு www.onlinepj.com என்ற அவருடைய அதிகாரப் பூர்வ இணையத்தளத்திலும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.tntj.net ம் நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகிறது.
தினமும் அதிகாலை 4 மணிமுதல் 5 மணி வரை மெகா டி.வியிலும் ஒளிபரப்பப் படுகிறது.
இஸ்லாமிய குடும்பவியலின் தாத்பரியத்தை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தனக்கே உரிய அழகிய பாணியில் அணைவரும் புரியும் வகையில் மிகவும் எழிய தமிழில் இவர் எடுத்துரைக்கும் முறை தமிழ்பேசும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக வெளிநாடுவாழ் மக்களிடம் இந்நிகழ்ச்சி பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருவதாகவும் கடந்த 21.08.2010 அன்று Times of india பத்திரிக்கை முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக இந்தத் தொடர் இலங்கையில் பெரும் தாக்கத்தையே உண்டுபண்ணியுள்ளதை நாம் அறிய முடிகிறது தினமும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அதிகரிப்பதுடன் ஒவ்வொரு நாளும் பேசப்படும் செய்திகளை மக்கள் மத்தியில் பலர் பரப்புகிறார்கள் .
இலங்கையிலுள்ள முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாமிய முறையில் மாற்ற அமைக்க இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவும் என நாம் கருதுகிறோம்
அத்துடன் தமிழ் பேசும் மக்களால் அதிகமாக பார்க்கப்படும் இணையதளங்களில் முதல் இடத்தையும் ஜெய்னுலாப்தீன் அவர்களின்www.onlinepj.com என்ற இணையதளம் பிடித்துள்ளதை இணையதளங்களின் தர வரிசையை வெளியிடும் Alexa இணையதளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நாளைக்கு சுமார் 6000ம் மேற்பட்டவர்கள் இந்த
இணையதள்த்தை பார்ப்பதாக அலெக்ஸா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
SOURCE: http://www.rasminmisc.tk/
No comments:
Post a Comment