கேள்வி: என் நண்பர் தன்னுடைய வேர்டில் உருவான பைலை காப்பி செய்து அனுப்பினார். ஆனால் என் கம்ப்யூட்டரில் உள்ள வேர்டில் திறக்க மறுக்கிறது. இது பழைய வேர்ட் 2003. நண்பரிடம் உள்ளது வேர்ட் 2007. என்ன தீர்வு? நண்பர் வெளிநாட்டுக்கு வேறு சென்றுவிட்டார். –கே.ஜானகிராமன், புதுச்சேரி
பதில்: நண்பர் வெளிநாடு போனால் என்ன! வேர்ட் 2007 உள்ள ஒரு கம்ப்யூட்டரில், நண்பர் கொடுத்த பைல்களைத் திறக்கவும். பின் அதே வேர்ட் தொகுப்பில் Save As கட்டளை கொடுத்து, பெயர் விண்டோ உள்ள இடத்தில் வலது பக்கம் உள்ள கீழ் அம்புக் குறியினை அழுத்தவும். அதில் வேர்ட் 2003 மற்றும் முந்தைய வேர்ட் பார்மட்டில் சேவ் செய்திட ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இதில் “.doc” என்ற துணைப்பெயருடன் பைலை சேவ் செய்திட ஆப்ஷன் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடவும். பின் இந்த பைலை காப்பி செய்து, உங்கள் வீட்டுக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும். நீங்கள் நன்றாகக் கவனித்திருந்தால், வேர்ட் 2007 தொகுப்பில் சேவ் செய்யப்பட்ட பைலின் துணைப் பெயர் “.docx” என்று இருக்கும்.
பதில்: நண்பர் வெளிநாடு போனால் என்ன! வேர்ட் 2007 உள்ள ஒரு கம்ப்யூட்டரில், நண்பர் கொடுத்த பைல்களைத் திறக்கவும். பின் அதே வேர்ட் தொகுப்பில் Save As கட்டளை கொடுத்து, பெயர் விண்டோ உள்ள இடத்தில் வலது பக்கம் உள்ள கீழ் அம்புக் குறியினை அழுத்தவும். அதில் வேர்ட் 2003 மற்றும் முந்தைய வேர்ட் பார்மட்டில் சேவ் செய்திட ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இதில் “.doc” என்ற துணைப்பெயருடன் பைலை சேவ் செய்திட ஆப்ஷன் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடவும். பின் இந்த பைலை காப்பி செய்து, உங்கள் வீட்டுக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும். நீங்கள் நன்றாகக் கவனித்திருந்தால், வேர்ட் 2007 தொகுப்பில் சேவ் செய்யப்பட்ட பைலின் துணைப் பெயர் “.docx” என்று இருக்கும்.
கேள்வி: நான் பத்திரிக்கை ஒன்றுக்கு டாகுமெண்ட் தயாரித்து கொடுக்கிறேன். வழக்கமான ஐந்து பக்க டாகுமெண்ட்டில், இரண்டு மற்றும் மூன்றாம் பக்கங்களில் மட்டும் டெக்ஸ்ட் இரண்டு காலங்களில் வர வேண்டும். இதனை மட்டும் எப்படி செட் அப் செய்வது? –சி.நாகராஜன், அருப்புக் கோட்டை
பதில்: டாகுமெண்ட்டைத் திறந்து, எந்த டெக்ஸ்ட்டை, காலம் பத்திகளில் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனுவில் இருந்து Columnஎன்பதைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது Column Dialog Box கிடைக்கும். Number of Columns பீல்டில், எத்தனை காலம் என்பதனைக் குறிப்பிடவும். அடுத்து Apply To பாக்ஸில், Selected Text என்பது தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும். பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட் விரும்பியபடி, காலம் பத்திகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
கேள்வி: இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் சில வேளைகளில் முழுத் திரையையும் அதற்கு மட்டும் பயன்படுத்த விரும்பி, உங்கள் டிப்ஸ் படி சில கீகளை அழுத்திப் பெறுகிறேன். ஆனால் கீழே இருக்கும் டாஸ்க் பாரினை மறைக்க என்ன செய்யலாம்? எனக்கு முழுத் திரையும் வேண்டும். என்னுடைய சிஸ்டம் எக்ஸ்பி. –டி.ஆர். சோமு, விழுப்புரம்
பதில்: அதனையும் மறைக்கலாம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுப்பட்டியலில் Properties என்பதில் இடது கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் தலைப்பு Taskbar and Start Menu Properties என்று இருக்கும். இதில் இரண்டு டேப்கள் தரப்பட்டிருக்கும். இதில் Taskbar என்ற டேப்பை செலக்ட் செய்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து விருப்பத் தேர்வுகள் கிடைக்கும். மூன்றாவதாக Keep the taskbar on top of windows என்று ஒன்றைப் பார்க்கலாம். இதன் முன் உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு, பின்னர் Apply என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் OK கிளிக் செய்திடவும். இப்போது சென்று பாருங்கள். நீங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தால் தான், டாஸ்க்பார் உங்களுக்குத் தோற்றமளிக்கும். நீங்கள் பிரவுசரைப் பயன்படுத்தும் போதோ, கடிதம் எழுதும் போதோ, டாஸ்க்பார் தெரியாது.
கேள்வி: கிகி பைட் என்று ஒரு அளவு உள்ளதா? இது மிகவும் துல்லியமாக பைட்ஸ் அளவைக் கூறுவதாக என் உயர் அதிகாரி கூறுகிறார். சற்று தெளிவு படுத்தவும். –கா. தமிழ்ச் செல்வி, மதுரை
பதில்: உங்கள் கேள்வையைப் படித்த பலருக்கு, பெயர் எப்படி துல்லியம் இல்லாமல் இருக்கும்? அதென்ன கிகி பைட் என்ற கேள்விகளெல்லாம் மனதில் ஓடும்? இல்லையா? இதோ கீழே படியுங்கள்.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, கிலோ பைட், மெகா பைட், கிகா பைட், டெரா பைட் என்பது எல்லாம் நாம் அறிவோம். இவை முறையே, 1024 பைட்ஸ், 1024 கிலோ பைட்ஸ், 1024 மெகா பைட்ஸ் மற்றும் 1024 கிகா பைட்ஸ் என்ற அளவுகளைக் குறிக்கின்றன. ஆனால் இது சரியான பெயர் இல்லையே! கிலோ என்பது 1000 என்ற எண்ணைத்தானே குறிக்கும். பின் எப்படி 1024க்கு கிலோ எனப் பெயர் சூட்டலாம் என்பது மனதில் ஏற்படும் கேள்வி. இதனால் தான் இந்தப் பெயர்களெல்லாம் துல்லியமான பெயர் இல்லையே என்பது நம் சந்தேகம். இது உண்மைதான். ஹார்ட் டிஸ்க் விற்பவர்கள் எல்லாம், டிஸ்க்கினை 2ன் பவர் எண்ணில் கூறாமல், ஆயிரத்திலேயே கூறி வந்ததால், இந்த பெயர்கள் நிலைத்துவிட்டன.
இந்த குழப்பமான, சற்று சரியற்ற பெயர்களை மாற்றிச் சரியான ஒரு பெயரைக் கொடுக்க, எடை மற்றும் அளவுகளுக்கான பன்னாட்டு International Bureau of Weights and Measures அமைப்பு புதிய பெயர்களை உருவாக்கி வழங்கியுள்ளது. 1024 பைட்ஸ் அடங்கியது ஒரு கிபி பைட் (kibibyte (KiB), 1024 கிபி பைட்ஸ் ஒரு மெபி பைட் (a mebibyte (MiB), ), இதே போல கிகி பைட் (gibibyte) மற்றும் டெபிபைட்(tebibyte) உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த சிஸ்டம் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை நாம் மாதம் ஒருமுறை கட்டாயம், டிபிராக் செய்திட வேண்டும் எனக் கூறுகிறார்களே, இது உண்மையா? –ஆர். நம்பி ராகவன், கோயமுத்தூர்
பதில்: முற்றிலும் தவறு. கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினைக் கட்டாயமாக டிபிராக் செய்திட வேண்டுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாகப் பட்டிமன்றத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. ஆனால் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத்தில், நீங்கள் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்திடவே தேவையில்லை. ஏனென்றால், சிஸ்டம் தானாகவே உங்கள் ஹார்ட் டிஸ்க்கினை, டிபிராக் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சிஸ்டத்தில் உள்ள Task Scheduler I கிளிக் செய்து பாருங்கள். இதில் ஒரு வேலையாக (Task) Scheduled Defrag என்று இருக்கும். அதில் Wednesday at 1:00 a.m என கிழமையும் நேரமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இயக்கப்படாமல் இருந்தால், கம்ப்யூட்டர் தானாகவே அடுத்த முறை, இயக்கப்படுகையில் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
கேள்வி: சிஸ்டம் ட்ரே – நோட்டிபிகேஷன் ஏரியா இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? – டி.சியாமளா சுரேஷ், கூனூர்
பதில்: நம்மில் பலர் சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படும் இடத்தை, மைக்ரோசாப்ட் நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area) என அழைக்கிறது. Systray.exe என்ற பைல் இதற்குக் காரணம் என்பதால், இதனைப் பலரும் சிஸ்டம் ட்ரே என அழைக்கின்றனர். இது பின்னணியில் இயங்கி, நோட்டிபிகேஷன் ஏரியாவினை நிர்வகிக்கிறது என்பதே சரி.
கேள்வி: என் குடும்பத்தினரை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்த போது, படம் பிடிக்கப்பட்டவர்கள் நன்றாக இருந்தாலும், பின்புலம் படு மோசமாக அமைந்துவிட்டது. இதனை எப்படி சரி செய்வது? –சி.நாகராஜ், விக்கிரவாண்டி
பதில்: நீங்கள் படம் எடுத்த கேமராவில் இதனைச் சரி செய்திடும் வசதி இல்லை. படத்தை கம்ப்யூட்டருக்கு மாற்றவும். பின்னர், அடோப் போட்டோ ஷாப் சாப்ட்வேரில் இந்த படத்தைத் திறந்து, அதில் உள்ள டூல்கள் மூலம் பேக் கிரவுண்டில் உள்ளதை நீக்கி, நீங்கள் விரும்பும் பின்புலத்தை இணைக்கலாம்.
கேள்வி: நல்ல பழைய கர்நாடக சங்கீத பாடல்களைத் தரும் இணைய தள முகவரி ஒன்றைத் தரவும். –ஆ. காமாட்சி அம்மாள், சென்னை
பதில்: பல தளங்கள் உள்ளன. கூகுள் சாதனத்தில் தேடிப் பெறலாம். எனக்குப் பிடித்த, மிகப் பெரிய தளம் http://www.sangeethapriya .org/ என்ற முகவரியில் இயங்குகிறது.
No comments:
Post a Comment