Saturday, September 11, 2010

தமிழில் மருத்துவ தளங்கள்

வணக்கம் நண்பர்களே நான் இங்கு மூன்று தமிழ் மருத்துவ தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒரு வேளை இந்த தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்க்ள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவட்டுமே என்கிற நோக்கம் மட்டுமே. இந்த காலத்தில் நிறைய விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஒரு விதத்தில் நம் உணவு முறையும் இதற்கு காரணம் இது யாவருக்கும் தெரியும் ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்வதில்லை. நாம் எடுத்த்தெற்கெல்லாம் நாம் மருத்துவமனை செல்லமுடிவதில்லை ஆனால் நமக்கு அந்த குறையை போக்குவதற்கென்றே எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவர்களுக்கு இருக்கும் நேரமின்மையிலும் தமிழில் மருத்துவ தகவல்களை என்னைப்போல சராசரி மனிதனுக்கும் புரியும் வகையில் மருத்துவ தகவல்களை எழுதுகிறார்கள்.

மதிப்பிற்குறிய நண்பர் திரு.துமிழ் அவர்களின் தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் பதிகிறார் அதுமட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் சந்தேகத்தையும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் அளிக்கிறார் கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் அவர் அளிக்கும் தகவல்கள் நமக்கு புரியும் வகையில் இருக்கும். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

திரு.துமிழ் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



அடுத்ததாக மதிப்பிற்குறிய நண்பர் திரு.ராஜ்மோகன் அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கன மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் ஆனால் இன்னும் அவர்கள் மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி தருவார்களேயானால் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ தளம் என்பதில் சந்தேகமில்லை. அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

திரு.ராஜ்மோகன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



அடுத்ததாக தமிழ் கன்சல்ட் தளம் இங்கு நான்கு மருத்துவர்கள் நமக்கு உதவி செய்வதெற்கென்றே இருக்கிறார்கள் இவர்களும் இந்த மருத்துவ சேவையே இலவசமாகவே செய்கிறார்கள் இவர்களை பொறுத்த வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கலாம் ஆனால் தமிழையே அவர்கள் முதன்மைபடுத்துகிறார்கள் ஆனால் சில இடங்களில் பதில் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அது ஒரு குறையாகத்தான் நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் புரிந்துகொளவதில் பிரச்சினையும் இருக்கும் ஆனால் அந்த குறையை களைந்தால் இது சிறந்த தமிழ் மருத்துவ தளம் தான். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

தமிழ் கன்சல்ட் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

No comments:

Post a Comment